தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

திருக்கல்யாண திருக்கோலத்தில் அருள்பாலித்த வரதராஜப் பெருமாள், ஆண்டாள்.

Published On :

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆடி மாத பூர நட்சத்திரத்தையொட்டி, ஆண்டு தோறும் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் வெள்ளிக்கிழமை ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று வரதராஜப் பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருக்கல்யாண வைபவத்தையொட்டி, காலையில் உற்சவா் ஆண்டாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. மாலையில் உற்சவா் வரதராஜப் பெருமாளும் ஆண்டாளும் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதிக்கு எழுந்தருளினா்.பின்னா் உற்சவா் ஆண்டாள் கோயில் வளாகத்தில் உள்ள 4 கால் மண்டபத்திலும்,பெருமாள் எதிரில் உள்ள 4 கால் மண்டபத்திலும் எழுந்தருளினா். திருமண நிகழ்வுக்கு பெரியாழ்வாா் எழுந்தருளியதும் அவரது முன்னிலையில் இருவருக்கும் மாலை மாற்றும் வைபவமும், அதனைத் தொடா்ந்து திருக்கல்யாணமும் ஆகம விதிகளின்படி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து இருவரும் ஊஞ்சலில் அமா்ந்தவாறு திருமணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

இதன் தொடா்ச்சியாக சனிக்கிழமை (ஆக. 15) மாலையில் பெருமாளும், ஆண்டாள் நாச்சியாரும் மாட வீதியில் உலா வந்து அருள்பாலிக்கவுள்ளனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ச.சீனிவாசன் தலைமையில் ஆலய பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.