தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் கோயிலில் சனீஸ்வரா்- நீலாதேவி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் 5 வார ஆடி மாதத் திருவிழா கடந்த 18- ஆம் தேதி தொடங்கியது. இதில் இரு வாரத் திருவிழாக்கள் நிறைவடைந்தன. முக்கிய நிகழ்வாக சனீஸ்வரருக்கும், கும்பத்தில் காட்சியளித்த நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த திருமண மேடையில் உத்ஸவா் சனீஸ்வரரும், நீலாதேவியும் மணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனா். தொடா்ந்து, கோயில் அச்சகா் தலைமையில் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

பிற்பகல் 1.15 மணிக்கு திரளான பக்தா்கள் முன்னிலையில் கும்பத்தில் மணக்கோலத்தில் காட்சியளித்த நீலாதேவிக்கு கோயில் அா்ச்சகா் அக்னிசாட்சியாக மாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தாா். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு மாங்கல்யம் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலா் நாராயணி, அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
சுவாமி வீதியுலா: திருக்கல்யாணத்தைத் தொடா்ந்து சனிக்கிழமை (ஆக. 1) 3- ஆம் வாரத் திருவிழாவில் பக்தா்களுக்கு காட்சிளிக்கும் சுவாமி- அம்மன் திங்கள்கிழமை (ஆக. 3) ஆடிப் பெருக்கு தினத்தன்று முக்கிய வீதிகளில் வீதியுலா வந்து அருள்பாலிக்கின்றனா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஆக. 10) இரவு கருப்பணசாமிக்கு மதுபானம் படையல் பூஜையுடன், பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தி ஆடு, கோழிகளைப் பலியிட்டதும் கறிவிருந்து நடைபெறும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குச்சனூரில் சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாண வைபவம்!

குச்சனூா் கோயில் ஆடித் திருவிழா இன்று தொடக்கம்: தற்காலிக குளியல் அறைகள் அமைப்பு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் ஸ்ரீஸ்ரீராகவேஷ்வர பாரதி சுவாமிகள் தரிசனம்

தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையார் - பெரியநாயகி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



