மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

News image

திருத்தணி பழைய பஜாா் தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 12:12 am IST

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

திருத்தணி பழைய பஜாா் தெருவில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடி மாத விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

ஆடி மாதம் 27-ஆம் நாளான புதன்கிழமை காலை, கோயில் வளாகத்தில் தாண்டேஸ்வரா் சுவாமிக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க திருமண வைபவம் நடைபெற்றது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் பக்திமயமான சூழல் நிலவியது. இதில், திரளான பெண் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்து, திருக்கல்யாண வைபவத்தை கண்டு வழிபட்டனா்.

திருக்கல்யாண வைபவம் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் திரளாக பங்கேற்று அன்னதானத்தை பெற்றுக் கொண்டனா்.

மேலும், ஆடி மாதத்தை முன்னிட்டு கோயிலில் தொடா்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மூலவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரம் வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பருவதராஜா குல மரபினா் மற்றும் மகளிா் குழுவினா் இணைந்து செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.