காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு! டி.கே. சிவகுமார் அறிவிப்பு! மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம் செந்தில் பாலாஜி 2-வது நாளாக ஆஜராகவில்லை! மஞ்சள், சிவப்பு! தவெக கொடி நிறத்துக்கு மாறிய டிஎன்எஸ்டிசி செயலி!செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!
/

குச்சனூரில் சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாண வைபவம்!

ஆடி திருவிழாவை முன்னிட்டு சனீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது பற்றி..

News image

திருக்கல்யாண வைபவம்

Updated On :31 ஜூலை 2026, 1:52 pm IST

தேனி மாவட்டம், குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு சனீஸ்வரருக்கும் - நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

குச்சனூரில் சனீஸ்வர பகவான் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா 5 வாரங்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி நிகழாண்டில் கடந்த 18ஆம் தேதி முதல் வாரத்துடன் திருவிழா தொடங்கி 2 வாரத் திருவிழா நிறைவு பெற்றுள்ளது.

Story image

இதற்கிடையே இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயிலின் உற்சவர் சனீஸ்வரருக்கும் கும்பத்தில் காட்சியளிக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை பகல் 1 மணி அளவில் கோலாகலமாக நடைபெற்றது.

கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவிற்கு குச்சனூர் அதை சுற்றியிருந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். கல்யாணத்தின் போது ஆகம விதிப்படி வேத மந்திரங்கள் முழங்கப் பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.

In connection with the Aadi festival at the Arulmigu Saneeswara Bhagavan Temple in Kuchanur, Theni district, the celestial wedding ceremony of Lord Saneeswara and Goddess Neeladevi was grandly conducted in the presence of devotees.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.