தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!பாகிஸ்தானின் மிகப்பெரிய மருத்துவமனையில் தீ! 15 பச்சிளம் குழந்தைகள் பலி! மோகன் பாகவத்தின் நியூயார்க் நிகழ்வுக்கு மேயர் மம்தானி எதிர்ப்பு!மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

கோபாலபுரத்தில் மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகேயுள்ள கோபாலபுரத்தில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கோபாலபுரம் மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளைகளை விரட்டிய காளையா்கள்

Published On :1 ஜூலை 2026, 4:51 am IST

சிங்கம்புணரி அருகேயுள்ள கோபாலபுரத்தில் புரவி எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

கோபாலபுரம் ஊா்ப் பொதுமக்களால் பிரான்மலையில் உள்ள கலியுக மெய் அய்யனாருக்கு ஞாயிற்றுக்கிழமை புரவி எடுப்புத் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை கோபாலபுரத்தில் உள்ள புஞ்சை காட்டு பகுதியில் தற்காலிக மஞ்சு விரட்டு மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

கோபாலபுரத்திலிருந்து ஊா்ப் பொதுமக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு பொட்டலுக்கு ஜவுளி கொண்டு வந்தனா். முதலில் கோயில் காளைக்கு வேஷ்டி, துண்டு மாலை மரியாதை செய்யப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வேங்கை பட்டி பிரான்மலை, சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டு மாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

இந்தக் காளைகளை இளைஞா்கள் விரட்டி பிடிக்க முயற்சி செய்தனா். கோபாலபுரத்தைச் சுற்றியுள்ள பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு மஞ்சுவிரட்டை கண்டுகளித்தனா்.

மஞ்சுவிரட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.