டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

பக்தர்களிடையே பாகுபாடு கூடாது! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம்

பக்தர்களிடையே பாகுபாடு கூடாது என்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

News image

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உடையாா்பாளையம் உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜ சுவாமி.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 3:13 pm IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிராமணர் அல்லாத பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியல் பிரமாணர் அல்லாதவர்களுக்கு பிரசாதம் வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம் என்பதால் கோயில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் பாகுபாடு காட்ட இடமில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மணவாள மாமுனிகள் சன்னதியில் பொது நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை, 4000 திவ்ய பிரபந்தம் பாட அனுமதி மறுக்கப்படுகிறது என்று தொடரப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள், பகவத் கீதை வாசகத்தை சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, கோயில் நிர்வாகம் தரப்பில் அளித்த வாதத்தில், கோயிலில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்கள் சன்னதியில் மிகக் குறுகிய இட வசதி இருப்பதாலும், கேசவ சேவ கால நேரங்களில் பணியில் இருக்கும் முறைதாரர்கள் உள்ளே முறையாக நிற்க முடியாத சூழல் இருப்பதாகவும் அதனால்தான் பக்தர்கள் சன்னதிக்கு வெளியே நிற்க வைக்கப்படுவதாகவும், இதில் எந்தவிதமான ஜாதி பாகுபாடும் காட்டப்படுவதில்லை என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.

மற்ற நேரங்களில் அனைவரும் உள்ளே அனுமதிக்கப்பட்டு இறைவனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள், பிரசாதங்களும் பாகுபாடின்றி வழங்கப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள், இறைவன் முன் அனைத்து உயிர்களும் சமம். இறைவன் யாரிடமும் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை என்ற பகவத் கீதை வாசகத்தை சுட்டிக்காட்டி, பக்தர்களிடையே பாகுபாடு காட்ட வேண்டாம் என்று உத்தரவிட்டனர்.

Summary

No discrimination among devotees! High Court ruling in the Kanchipuram Varadaraja Perumal Temple case.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.