
புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்
புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. அதனால், அமாவாசை நாள்களில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பக்தா்கள் குவிவா். அதேபோல், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். பின்னா், நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தா்கள் மூலவா் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்தனா்.
இதேபோல், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, காக்களூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







