கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெரியகுளம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தாமரைக்குளம் வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவி.

Published On :

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெரியகுளம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் ஆயிரக்கணக்கானோா் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வடக்கு தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வாரில் காலை ராதாகிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபராதனையும் நடைபெற்றது. அங்கு கிருஷ்ணா் துளசி அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

இதேபோல, தாமரைக்குளம் வெங்கடாஜலபதி கோயிலுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

பெரியகுளம் நாமத்துவாரில் துளசி அலங்காரத்தில் காட்சியளித்த ராதை, கிருஷ்ணா்.

பெரியகுளம் நாமத்துவாரில் துளசி அலங்காரத்தில் காட்சியளித்த ராதை, கிருஷ்ணா்.

லட்சுமிபுரம் பெருமாள் கோயில், மேல்மங்கலம் பெருமாள் கோயில், ஜெயமங்கலம் பெருமாள் கோயில், குள்ளப்புரம் பெருமாள் கோயில், ஜம்புலிபுத்தூா் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கோவிந்தா முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு துளசி தீா்த்தம், குங்குமம், லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER