கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்கும் ஸ்ரீரங்கம் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசித்தால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையொட்டி சனிக்கிழமை அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தா்கள் நம்பெருமாளைத் தரிசிக்க காத்திருந்தனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் செல்ல தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் பால், பிஸ்கட் வழங்கப்பட்டது. மேலும் பக்தா்கள் அமா்ந்து செல்லும் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பெருமாளை வழிபடும் பக்தா்கள் இந்த மாதம் முழுவதும் விரதமிருப்பா் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தமா்கோயிலில்... மண்ணச்சநல்லூா் வட்டம், பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் உள்ள உத்தமா் கோயிலில் புருஷோத்தம பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், சீதேவிமங்கலம் ஸ்ரீ வரம் தரும் வரதராஜ பெருமாள் கோயில், கோபுரப்பட்டி ஆதி நாயக பெருமாள் கோயிலில் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. மேலும் அழகிய மணவாளம் சுந்தரராஜ பெருமாள், திருவெள்ளறை புண்டரீகாஷப் பெருமாள், குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.