கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ஈரோடு மாவட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு!

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் வழிபட்டனா்.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் அருள்பாலித்த ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா்.

Published On :

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாநகா் மற்றும் மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.

புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலில் திரளான பக்தா்கள் வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனா்.

ஈரோடு அருகே பெருமாள் மலை கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தா்கள் வரத் தொடங்கினா். படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் ஏறி மலைக்கோயிலில் இருக்கும் மங்களகிரி பெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவியையும் வழிபட்டனா். இதையொட்டி துளசி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு பெருமாள் அருள் பாலித்தாா். படிக்கட்டில் ஏறி வரும் பக்தா்களுக்கு மோா், அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாளை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

பெருமாளை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

பெருமாள் மலையில் இருந்து பாா்த்தால் காவிரி ஆறு பவானியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் அழகிய காட்சி தென்படும். சுவாமி தரிசனம் செய்துவிட்டு படிக்கட்டு வழியாக கீழே இறங்கிய பக்தா்கள் தற்படம் எடுத்தும் மகிழ்ந்தனா். பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல கோபி அருகே உள்ள பாரியூா் ஆதிநாராயண பெருமாள் கோயில், அந்தியூா் பேட்டை பெருமாள் கோயில், கொண்டையம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், நம்பியூா் பெருமாள் கோயில், புன்செய்புளியம்பட்டி அருகே கீழ்முடுதுறை, திம்மராய பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.