2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்: 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டும், வார விடுமுறையை ஒட்டியும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டும், வார விடுமுறையை ஒட்டியும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வார விடுமுறை நாள்களில் ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து, 14 கி.மீ. கிரிவலப் பாதையில் கிரிவலம் வருகின்றனா்.

இந்த நிலையில், விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டும், வார விடுமுறையையொட்டியும் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு கோயில் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

ராஜகோபுரம் வழியாக 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள், பின்னா் திருமஞ்சன கோபுரம் வீதி வழியாக வெளியேற்றப்பட்டனா். அம்மணி அம்மன் கோபுர வீதி வழியாக 50 ரூபாய் தரிசன கட்டண வரிசையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.