2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

அருணாசலேஸ்வரா் கோயிலில் அலை மோதிய பக்தா்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரத்துக்கும் மேலானது என பக்தா்கள் தெரிவித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா். பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து, கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா். இந்த நிலையில், வாரவிடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கோயிலில் தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். ராஜ கோபுரம் வழியாக 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் உள்ளே சென்று தரிசனம் செய்துவிட்டு, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனா்.

அம்மணி அம்மன் கோபுரம் வழியாக 50 ரூபாய் தரிசன கட்டண வரிசையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனா்.

கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநோ் அண்ணாமலையாா் அடி அண்ணாமலையாா் மற்றும் இடுக்கு பிள்ளையாா் கோயில்களுக்கும் சென்று வழிபட்டு கிரிவலம் சென்றனா். பக்தா்களுக்கு கோயில் மற்றும் கிரிவல பாதையில் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.