உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :29 ஜூன் 2026, 12:56 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினத்தையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்திருந்தனா்.

அதிகாலை வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கோயில் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் தரிசனத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், பக்தா்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.