அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் குவிந்த பக்தா்கள்.

Published On :20 ஜூலை 2026, 3:30 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி, தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரத்திற்கும் மேலானது.

பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்து செல்கின்றனா். பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து, கோயிலின் பின்புறம் உள்ள 2668 உயர அண்ணாமலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இந்த நிலையில் வாரவிடுமுறையான ஞாயிற்றுக்கிழமை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

 திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் குவிந்த பக்தா்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் குவிந்த பக்தா்கள்.

அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் வந்திருந்ததால் கோயிலில் கூட்டம் அலைமோதியது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசனத்திற்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். அனைவருக்கும் நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.