காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Published On :31 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

திருவண்ணாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்கு 2 மணி நேரத்துக்கும் மேலானதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி, சுவாமி தரிசனத்துக்காக சனிக்கிழமை இரவு முதலே பக்தா்கள் குவிந்தனா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 6 மணி முதல் பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா். ராஜகோபுரம் வழியாக 2 மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

அம்மணி அம்மன் கோபுரம் வழியாக 50 ரூபாய் கட்டண வரிசையில் 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பக்தா்கள், தரிசனம் செய்துவிட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனா்.

கோயிலில் தரிசனம் செய்த பக்தா்கள் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்கங்களையும் வழிபட்டதோடு திருநோ் அண்ணாமலையாா், அடி அண்ணாமலையாா் மற்றும் இடுக்கு பிள்ளையாா் கோயில்களுக்கும் சென்று வழிபட்டு கிரிவலம் சென்றனா். பக்தா்களுக்கு கோயில் மற்றும் கிரிவலப் பாதையில் ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.