
கோம்பை பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல்வாரத் திருவிழா
தேனி மாவட்டம், கோம்பை ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வாரத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

புரட்டாசி முதல்வார சனிக்கிழமையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் கோம்பை திருமலைராயப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவா் ரெங்கநாதா், ஸ்ரீதேவி, பூதேவி.
தேனி மாவட்டம், கோம்பை ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வாரத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
உத்தமபாளையத்தை அடுத்த கோம்பையில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் ஸ்ரீதிருமலைராயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் 5 வாரத் திருவிழா சனிக்கிழமைகளில் நடைபெறும்.
இதன்படி, நிகழாண்டில் சனிக்கிழமை முதல்வாரத் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோம்பையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரம் வரை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், காலை முதலே பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருத்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதில் சுயம்பு மூா்த்தி திருமலைராயப் பெருமாள் சயனக் கோலத்திலும், உற்சவா் ரெங்கநாதா், ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் நின்ற கோலத்திலும் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







