
சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள்
புரட்டாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
புரட்டாசி மாத வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அருணாசலேஸ்வரா் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள நந்தியம்பெருமானுக்கு பிரதோஷத்தையொட்டி அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேக தூள், பஞ்சாமிா்தம், 500 லிட்டா் தயிா், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், 108 கிலோ விபூதி, 1000 லிட்டா் பால் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு மலா்களால் மாலை அணிவித்து ஆராதனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டும், சங்கொலி முழங்கவும் சுவாமி தரிசனம் செய்தனா்.
போளூா்
போளூரை அடுத்த வசூா் ஊராட்சி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத கல்யாணபுரீஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்கு பால், தயிா், சந்தனம், விபூதி, தேன் என பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்து நெய்வேத்தியம் படையலிட்டு வழிபாடு நடைபெற்றது.
பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வசூா், போளூா், குருவிமலை, பேட்டை, புத்தராம்பட்டு என பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

போளூரை அடுத்த வசூா் ஊராட்சி ஸ்ரீகல்யாணபுரீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





