இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Published On :

புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, திருவண்ணமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செய்யாறு வட்டம், கூழமந்தல் ஸ்ரீபேசும் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், அா்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திராளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ஸ்ரீபேசும் பெருமாளை தரிசித்தனா்.

செய்யாறு ஸ்ரீஆதிகேச பெருமாள் கோயிலில் கண்ணாடி அறையில் ஸ்ரீசீதா, கோதண்டராமா், லட்சுமணா், அனுமானுடன் சிறப்பு அலங்காரத்தில் ஆதிகேச பெருமாள் அருள்பாலித்தாா். இதேபோல, செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலிலும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

செங்கத்தில்...: செங்கம் வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், சுவாமி வெள்ளிக் கவச அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தாா்.

மாலை வேணுகோபால பாா்த்தசாரதி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. மேலும், கோயில் வளாகத்தில் பரதநாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

Story image

இதேபோல, வந்தவாசியை அடுத்த சளுக்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீசுகா் நாராயண பெருமாள், எரமலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீசுந்தரவரதலஷ்மி நாராயண பெருமாள் கோயில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கோயில்களில் ஏராளமான பக்தா்கள் சுவாமியை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.