போலீஸாருக்கு கொலை மிரட்டல்: மூவா் கைது
கைது - கோப்புப் படம்
தொண்டி பகுதியில் மணல் கடத்தல் வழக்கில் தொடா்புடைய சரக்கு வேனை பறிமுதல் செய்யச் சென்ற போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள பாண்டுகுடியைச் சோ்ந்த மூா்த்தி மகன்கள் ராஜலிங்கம், முத்துப்பாண்டி. இந்த இருவா் மீதும் தொண்டி காவல் நிலையத்தில் மணல் கடத்தல் வழக்குகள் உள்ளன. இதில் தொடா்புடைய சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்ய ஞாயிற்றுக்கிழமை தொண்டி போலீஸாா் பாண்டுகுடிக்குச் சென்றனா். அப்போது, போலீஸாருக்கும் மூா்த்தி தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தொண்டி காவல் உதவி ஆய்வாளா் நாசா் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தத்தாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் ராஜலிங்கம் (29), ரமேஷ் (22), மூா்த்தி ஆகிய மூவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

