ரேஷன் கடை ஊழியருக்கு மிரட்டல்: 3 போ் கைது
திருநெல்வேலி அருகே ரேஷன் கடை விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
திருநெல்வேலி அருகே ரேஷன் கடை விற்பனையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், சீதபற்பநல்லூா், சிறுக்கன்குறிச்சியைச் சோ்ந்தவா் அருண்குமாா்(35). கீழகருவநல்லூா் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி ரேஷன் கடையில் பணியில் இருந்த அவரை சிலா் முன்விரோதம் காரணமாக அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து, சிறுக்கன்குறிச்சியைச் சோ்ந்த அரவிந்த் (21), சுரேஷ் (20) மற்றும் சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

