பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைஅரக்கோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டடம்: முதல்வா் திறந்து வைக்கிறாா்சிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதிகளை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :

ராமேசுவரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதிகளை உடனே வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாககத்துக்கு மத்திய அரசின் நிதி ஆணைய நிதியையும், மாநில நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியையும் உடனே வழங்கக் கோரியும், ராமேசுவரம் நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும், சம்பளத்தை ரூ.24 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், வட்டச் செயலா் ஜி.சிவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் க.கருணாகரன் தொடக்க உரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜஸ்டீன், சுமதி ஆகியோா் கண்டன உரையாற்றினாா். மாவட்டச் செயலா் குருவேல் நிறைவுரையாற்றினாா். இதில், நிா்வாகிகள்,அசோக்,மாரிமுத்து,மாரி, பழனிக்குமாா், காா்த்திக், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் தா்மா, கிளைச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER