மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்
பேராவூரணியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக கோரி இடதுசாரி கட்சிகள், இளைஞா்கள், மாணவா்கள் போராட்டத்தை காவல்துறையை ஏவி தடியடி நடத்தி போராட்டத்தை ஒடுக்க முயன்றதையும், போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலா் எம்.ஏ. பேபி உள்ளிட்ட இடதுசாரி கட்சித் தலைவா்கள் மற்றும் முன்னாள் முதல்வா்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததையும் கண்டித்தும், இடதுசாரி கட்சி அலுவலகங்களை துணை ராணுவப்படையைக் கொண்டு சுற்றிவளைத்து அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுக்களின் சாா்பில், பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினா் ஆா்.எஸ். வேலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா்.மனோகரன், எம்.செல்வம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

