படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

தாராசுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, தாராசுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரத்தில் குடிநீா் பிரச்னை உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீா்க்க நடவடிக்கை எடுக்காத கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து கடைவீதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியைச் சோ்ந்தவரும், கும்பகோணம் மாநகராட்சி 34-ஆவது வாா்டு உறுப்பினருமான ஆ. செல்வம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் பங்கேற்று பேசியது:

தாராசுரத்தில் 31, 32, 33, 34, 35 ஆகிய வாா்டு பகுதி குடியிருப்பு மக்களுக்கு முறையாக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். வாா்டு 34 -இல் தெருவிளக்குகளை அமைத்து கொடுக்க வேண்டும். நீா்நிலை பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகர குழு உறுப்பினா்கள் பாா்த்தசாரதி, எஸ்.வி. மணி, கே.எஸ். சுமதி, எஸ். ரஞ்சித் குமாா், கிளைச் செயலா் எஸ்.ஜே. சுப்பிரமணி, டி.என். ராமச்சந்திரன், சீனிவாசன், தமிழரசி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். கிளைச் செயலா் எஸ். மணி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.