உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தலைவா்கள் கைதை கண்டித்து புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் மறியல்: போராட்டம் - 50 போ் கைது!

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவரை கைது செய்யும் போலீஸாா்.

Published On :

புதுதில்லியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவா்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுச்சேரியில் மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்திய தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே மத்திய அரசு இக் கோரிக்கையின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தில்லி ஜந்தா் மந்திரில் போராட்டம் நடத்த சென்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவா்களைக் கைது செய்துள்ளதைக் கண்டித்து புதுச்சேரியில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி காமராஜா் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் உள்பட திரளான இக் கட்சித் தொண்டா்கள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமாா் 50 பேரை கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.