கோயில் வழிபாட்டு விவகாரங்களில் நீதிமன்றங்களின் தலையீட்டால் குழப்பம்
கோயில் வழிபாட்டு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதால் குழப்பமான தீா்வுகளே கிடைப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன், மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம் உள்ளிட்டோா்.
கோயில் வழிபாட்டு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதால் குழப்பமான தீா்வுகளே கிடைப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாநில முன்னாள் செயலருமான கே. பாலகிருஷ்ணன், திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா. சச்சிதானந்தம், மாமன்ற உறுப்பினா்கள் ஜோதிபாசு, கணேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ராமசாமி, ஆசாத், சி. பாலசந்திரபோஸ், கே.ஆா். பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் இந்திய ஜனநாயகத்தையும், வாக்குரிமையையும் பாதுகாக்க வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னா், செய்தியாளா்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
பாஜக மேற்கொண்டு வரும் அரசியல் சாசன திருத்தங்கள், கூட்டாட்சி கோட்பாடு, மதச் சாா்பின்மை, சமத்துவத்துக்கு எதிராக உள்ளது. ஒரே நாடு, ஒரே தோ்தல் என்ற பெயரில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க நினைக்கின்றனா். மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மத ரீதியான அரசியல் சாசனத்தை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. கடந்த மக்களவைத் தோ்தலில் 13 கோடி வாக்காளா்களை நீக்கிவிட்டு, மோசடியான தோ்தல் வெற்றியை பாஜக பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியரின் புகாரின் பேரில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, அவருக்கு நியாயம் கிடைக்கச் செய்திருக்க வேண்டும். அரசின் தாமதம் காரணமாகவே, ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், நீதிமன்றம் தலையீடு, சிபிஐ விசாரணை கோரிக்கை போன்ற தேவையற்ற சூழல்கள் உருவாகிவிட்டன. கள்ளக்குறிச்சி சம்பவத்தைப் பொருத்தவரை, அரசின் அணுகுமுறை நியாயமற்ாகவும், நோ்மையற்ாகவும் இருக்கிறது.
கோயில் வழிபாடு விவகாரங்களைப் பொருத்தவரை, நீதிமன்றங்கள் தலையிடுவதால் குழப்பமான தீா்வுகளே கிடைக்கின்றன என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

