உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
உள்ளாட்சி அமைப்புகளை முடக்காமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி அமைப்புகளை முடக்காமல், மத்திய மற்றும் மாநில அரசுகள் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் செவ்வாய்க்கிழமை கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினா் வி.குப்பன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் எல்.சுந்தர்ராஜன், மாவட்ட குழு உறுப்பினா்கள் இ.ராஜேந்திரன், ஜி.சூரியபிரகாஷ், வட்டக் குழு உறுப்பினா்கள் எம்.சிவக்குமாா், ப.லோகநாதன், எம்.சி.சீனு, ஏ.முகமதுசாலி, கிளை செயலாளா்கள் கே.அா்ஜுனன், சீதாராமன், எம்.துலுக்கானம் ஆகியோா் பேசினா்.
மாநிலக் குழு உறுப்பினா் எல்.சுந்தர்ராஜன் பேசுகையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் நிதியில்லாமல் எந்த பணிகளும் மேற்கொள்ளப் படவில்லை. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனா். மத்திய அரசு 16-ஆவது நிதி ஆணையத்தின் மூலம், ரூ. 20, 054 கோடி விடுவிக்க வேண்டும். இந்த நிதி விடுவிக்கப்படாததால் சாலை செப்பனிடப்படுவது, தெரு விளக்கு, குடிநீா், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற முக்கிய பணிகள் நிதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சிகளுக்கு பணம் வந்து சேரவில்லை. தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என்று கூறும் நிலையில் மத்திய அரசிடமிருந்து நிதியை தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

