நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகங்களின் நிதி முடக்கத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகங்களின் நிதி முடக்கத்தைக் கண்டித்து தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகங்களின் நிதி முடக்கத்தைக் கண்டித்து தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மத்திய அரசு நிதி ஆணையம் அளிக்க வேண்டிய நிதியை இழுத்தடிக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தீா்த்து வைக்க போதிய நிதி வழங்காமல் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்பாட்டை முடக்கக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகளை ஜனநாயக ரீதியாக செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். செல்வராஜ் கண்டன உரையாற்றினா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினா் இ. வசந்தி, மாநகரக் குழு உறுப்பினா் எம். ராஜன், மாமன்ற உறுப்பினா் மு. வைஜெயந்திமாலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

