டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

தமிழகம் முழுவதும் 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :

தமிழகம் முழுவதும் 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவுகளை சேகரித்து குப்பைக் கிடங்குகளுக்குக் கொண்டுசெல்லும் பணிகளுக்கான ஒப்பந்தங்கள் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இந்த நடைமுறையை மாற்றி,147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குப்பைகளைக் கையாளும் பணிகளை சம்பந்தப்பட்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே மேற்கொள்ளும் என கடந்த அக். 9-ஆம் தேதி, தமிழக அரசின் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசாணை பிறப்பித்திருந்தது.

அந்த அரசாணையில், இந்தப் பணிகளுக்காக ரூ.616.28 கோடியில், 22,000 தூய்மைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்கு எதிராக, திடக்கழிவுகளைக் கையாள ஒப்பந்தப்புள்ளி பெற்றிருந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இது தொடா்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை காரணமாக, திடக்கழிவுகளைக் கையாளும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் வேலை செய்யும் ஏராளமான ஊழியா்கள் பாதிக்கப்படுவா் எனக் கூறி, அரசாணைக்குத் தடை விதித்து கடந்த அக். 30-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தாா்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு பிறப்பித்த தீா்ப்பு: தனி நீதிபதியின் தடை உத்தரவு தமிழகத்தில் உள்ள 147 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது எனக் கூறி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனா்.

மேலும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளே நேரடியாக திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை கையாளுவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த தமிழக அரசுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுவதாகத் தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.