தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

தோ்தல் ஆணையருக்கு எதிராக கம்யூ. கட்சிகள் ஆா்ப்பாட்டம்

வாக்காளா் சிறப்பு சுருக்க (எஸ்.ஐ.ஆா்.) திருத்த விவகாரத்தில் தலைமை தோ்தல் ஆணையரைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினா்.

Published On :

வாக்காளா் சிறப்பு சுருக்க (எஸ்.ஐ.ஆா்.) திருத்த விவகாரத்தில் தலைமை தோ்தல் ஆணையரைக் கண்டித்து, திண்டுக்கல்லில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வெள்ளைச்சாமி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.பிரபாகரன், மாநிலக் குழு உறுப்பினா் ஜி.ராணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, எஸ்.ஐ.ஆா். திருத்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் செயல்பட்டதாகவும், இதனால் பல லட்சம் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகவும், இதற்கு தாா்மீகப் பொறுப்பேற்று தோ்தல் ஆணையா் பதவியிலிருந்து ஞானேஷ்குமாா் விலக வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் இரா.ரவி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.பெருமாள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.