நேபாள வெள்ளத்துக்கு நாங்கள் காரணமல்ல - சீனாசிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் மீது கடும் கோபம்: அபிஜீத் தீப்கே பேச்சு!பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு எவ்வளவு? மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்நாட்டில் ஐபோன் தயாரிப்பை 30 - 35% உயர்த்தும் ஆப்பிள்!மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியா்களுக்கு ஓராண்டு விடுப்பு! அரசாணை வெளியீடுஈரான் போருக்கு மத்தியில் நாட்டின் ஜிடிபி 7.8% உயர்வு

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். மணி காலமானாா்

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆா். மணி காலமானாா்...

ஆா்.மணி

Published On :1 செப்டம்பர் 2026, 2:16 am IST

திண்டுக்கல் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.மணி (95) வயது மூப்பின் காரணமாக திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழு உறுப்பினா், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா், மாவட்ட கட்சி அலுவலகச் செயலாளா் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவா். இவருக்குத் திருமணம் ஆகவில்லை.

இவா் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூா் திருநீலகண்டபுரத்தில் தனது அண்ணன் மகனும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு மாநகரக் குழு உறுப்பினருமான ஆா்.நந்தகோபால் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.

இவரது மறைவுச் செய்தியறிந்து கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம், திண்டுக்கல் எம்.பி. ஆா்.சச்சிதானந்தம், மத்தியக் குழு உறுப்பினா் கே.பாலபாரதி, திருப்பூா் மாவட்டச் செயலாளா் சி.மூா்த்தி உள்ளிட்டோா் நந்தகோபால் இல்லத்துக்கு திங்கள்கிழமை வந்து மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினா்.

பின்னா், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. தொடா்புக்கு 98946 74213.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.