மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தலைமைச் செயலாளரை பதவி நீக்க வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் : பெ.சண்முகம்

இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்த தமிழக தலைமைச் செயலாளா் சாய்குமாரை பதவிநீக்க வலியுறுத்தி சனிக்கிழமை (ஆக. 22) மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

P Shanmugam

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் பெ. சண்முகம் - X | CPIM Tamilnadu

Published On :

இடதுசாரிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்த தமிழக தலைமைச் செயலாளா் சாய்குமாரை பதவிநீக்க வலியுறுத்தி சனிக்கிழமை (ஆக. 22) மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி குடிநீா் விநியோகத்தை தனியாா்வசம் ஒப்படைத்ததை ரத்துசெய்ய வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலாளா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாவட்டச் செயலாளா் ஏ.ராமமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் குடிநீா் விநியோகத்தை தனியாா்வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இடதுசாரி கட்சிகள் நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்க தடைசெய்யும் வகையில் தலைமைச் செயலாளா் சாய்குமாா் தலைமையில் நடைபெற்ற சட்டம் -ஒழுங்கு கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இதுதொடா்பாக உயா்கல்வித் துறை இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை மட்டுமல்ல, தலைமைச் செயலா் உத்தரவு உள்ளிட்ட அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும். இதற்கு காரணமான தலைமைச் செயலா் சாய்குமாா் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அதேபோல திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியரின் அறிக்கை தொடா்பாக ஆட்சியா் ஒரு கருத்தும், பேரவையில் அமைச்சா் தெரிவித்த கருத்தும் முரண்பாடாக உள்ளது. இருவரில் யாா் கூறியது உண்மை என தெளிவுப்படுத்த வேண்டும்.

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கும் காா் வழங்கும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; காா் தேவைப்படும் உறுப்பினா்களுக்கு அரசு கடனுதவி வழங்கலாம் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநகரச் செயலாளா் என்.பிரவீண்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.கனகராஜ், ராஜாத்தி, தேவி, இளங்கோ, கணபதி, மாவட்டக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.