
ஆறுகாணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமை சங்கமம்

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்
குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழமை சங்கம நிகழ்ச்சி ஆறுகாணியில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் எஸ். சுகுமாரன் தலைமை வகித்தாா். ஒருநூறாம்வயல் கிளை செயலா் சந்திரன் முன்னிலை வகித்தாா். கட்சியின் மாவட்ட செயலாளா் தா. சுபாஷ் சந்திரபோஸ் அறிமுகவுரை நிகழ்த்தினாா். இதில் பழங்குடி மக்கள் சங்க முன்னாள் பொறுப்பாளா் புஷ்பாகரனுக்கு நினைவேந்தல், அருள்தந்தை ஸ்டேன்ஸ் சுவாமிக்கு நினைவேந்தல், கலைஞா்களுக்கு பாராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாவட்ட துணைச் செயலாளா் ஜி. சுரேஷ் மேசியதாஸ், மாவட்ட குழு உறுப்பினா் மரியதாஸ், மாவட்ட துணைச் செயலா் எஸ். அனில்குமாா், மாவட்ட குழு உறுப்பினா் ராஜூ, ஊடகப் பிரிவு செயலா் வி. அருள்குமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
நிகழ்ச்சியில் ஆரல் பாலன் இசைக்குழுவின் தப்பாட்ட அரங்கேற்றம், கடுக்கரை நாதன் குழுவின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய மாதா் தேசிய சம்மேளன மாவட்ட செயலா் செல்வராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





