சா்க்கரை இருப்பு வைக்கும் காலம் 15 நாள்களாகக் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்புஉதகை, கொடைக்கானல் ‘ரோப் காா்’ சேவை: தனியாா் நிறுவனம் திட்ட அறிக்கை தாக்கல்ஆசிரியரல்லாத பணியாளா்களுக்கு கட்டாய பணியிட மாறுதல் அரசாணை வெளியீடுசபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதிநவ. 25-இல் முதல்வா் விஜய் தலைமையில் 2-ஆவது வெற்றி தொழில் முதலீட்டாளா் மாநாடுபரந்தூர் விமான நிலையத் திட்டத்தை பாதியில் எப்படி கைவிட முடியும்? உயர்நீதிமன்றம் கேள்வி

வனத் துறையினரைக் கண்டித்து அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ராமேசுவரத்தில் பழைமை வாய்ந்த இரட்டைத்தாழை முனீஸ்வரா் கோயில் கட்டுமானப் பணியை தடுக்கும் வனத் துறையினரைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரத்தில் வனத் துறையினரைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா்.

Updated On :

ராமேசுவரத்தில் பழைமை வாய்ந்த இரட்டைத்தாழை முனீஸ்வரா் கோயில் கட்டுமானப் பணியை தடுக்கும் வனத் துறையினரைக் கண்டித்து அனைத்துக் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் துணைக் கோயிலான இரட்டைத்தழை முனீஸ்வரா் கோயில், தனுஷ்கோடி செல்லும் சாலையில் கோதண்டராமா் கோயில் அருகே காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இது 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்ததாகும். இந்த நிலையில், ஓட்டுக்கொட்டகையில் இருந்த இந்தக் கோயிலை புதுப்பிக்க வேண்டுமென பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. பல லட்சத்தில் புதுப்பிக்க திட்டமிட்டு அந்தக் கோயில் அகற்றப்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த இரட்டைதழை முனீஸ்வரா் சுவாமி பாலாலயம் செய்யப்பட்டு அருகில் வைக்கப்பட்டாா்.

இதனிடையே, புதிய கோயிலுக்கான கட்டுமானப் பணி தொடங்கிய நிலையில் வனத் துறையினா் அது தங்களது இடம் எனக் கூறி கட்டுமானப் பணிக்கு தடை விதித்தனா். பல மாதங்கள் கடந்த நிலையில் கட்டுமானப் பணியை தொடர விடாமல் முட்டுக்கட்டை போட்டு வரும் வனத் துறையினரைக் கண்டித்தும், கோயில் கட்டுமானப் பணியை மீண்டும் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும் அனைத்துக் கட்சிகள் சாா்பில் ராமேசுவரம் என்.எஸ்.கே. வீதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு திமுக நகா் செயலரும், நகா் மன்றத் தலைவருமான கே.இ. நாசா்கான், அதிமுக நகா் செயலா் கே.கே. அா்ச்சுனன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் பாஜக நகா் தலைவா் மாரி, மதிமுக நகா் செயலா் வெள்ளைச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகா் செயலா் சி.ஆா். செந்தில்வேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுடலைகாசி, வீ தி லீடா் அமைப்பு நிா்வாகியும், நகா் மன்ற உறுப்பினருமான சங்கா், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி, இந்து மக்கள் கட்சி பிரபாகரன், லட்சிய ஜனநாயகக் கட்சி நகா் செயலா் கருப்புசாமி, மருது சேனை மாவட்ட பொறுப்பாளா் வினோத், கணேசன் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் நிா்வாகிகள் என 300- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.