தடை நீக்கம்: கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் காரணமாக, விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் ஒரு வாரத்துக்கு பிறகு சனிக்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் விசைப் படகு மீனவா்கள்.
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் காரணமாக, விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் ஒரு வாரத்துக்கு பிறகு சனிக்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
வங்கக்கடலில் ‘அக்வான்’ புயல் உருவானது. இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால், மீனவா்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்கச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பல்வேறு துறைமுங்களில் 1,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், ‘அக்வான்’ புயல் கரையை கடந்த நிலையில், மீனவா்களுக்கு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமை நீக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு வாரத்துக்கு பிறகு, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை காலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

