புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன் வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.

கோப்புப் படம்
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்று மீன் பிடிக்க மீன் வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனா்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
எனவே, திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து மீனவா்களும் கரைக்குத் திரும்ப வேண்டும். அத்துடன் வரும் 13-ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் அனைத்து வகையான மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக அவரவா் வழக்கமான மீன் இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.
மீனவா்கள் அனைவரும் வானிலை எச்சரிக்கைகளையும், மீன்வளத்துறையின் அறிவுரைகளையும் தவறாமல் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

