புதிய புயல் சின்னம்! மீனவர்கள் நவ. 13 ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!
நவ. 14 முதல் நவ. 20 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

புயல் சின்னம் - கோப்புப்படம்
தமிழக மீனவர்கள் நவ. 13 ஆம் தேதி வரை கடலுக்கு செல்லலாம். நவ. 13 ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்புவது போல திட்டமிடுமாறு தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரம் தொடர்பாக, டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்திருப்பதாவது:
”குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு கடல் பகுதியில் காற்று சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக, ஈரப்பதமான கீழைக்காற்று டெல்டா மற்றும் தென் கடலோரப் பகுதிகள் வழியாக செல்கிறது.
வானிலை எதிர்ப்பார்ப்பு:
நவ. 9 ஆம் தேதி முதல் நவ. 11 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு காவிரி டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களான காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழையும், ஒரிரு இடங்களில் பலத்த மழையும் பதிவாகும்.
கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பதிவாகும்.
சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழையின் தாக்கம் குறைந்து இரவு நேர பனிப்பொழிவு அதிகரிக்கும்.
காவிரி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பெய்யக்கூடிய மழை வேளாண் பணிகளுக்கு சாதகமாக அமையும். பயிர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மழையாக அமையும்.
மீனவர்களுக்கான முக்கிய அறிவுப்பு:
தமிழக மீனவர்கள் நவ. 13 ஆம் தேதி வரை கடலுக்கு செல்லலாம். நவ. 13 ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்புவது போல திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
நவ. 14 முதல் 20 வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நவ. 15 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என்பதால் முன்னெச்சரிக்கையாக திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Tamil Nadu fishermen may head out to sea until November 13. Private weather forecaster Hemachandran has advised them to plan their return to the shore by the night of November 13.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


