பாகிஸ்தானுக்கு சாஸ்திரியைப் போலவே பதிலடி கொடுக்கிறார் மோடி! சொன்னது யார் தெரியுமா? பாஜகவின் கிளைதான் தவெக; உண்மையைப் பேசிய விஜய்: சீமான் தொடர் விடுமுறை: அதிக கட்டண வசூலைத் தடுக்க ஆம்னி பேருந்துகளில் அக்.21 வரை தீவிர வாகனத் தணிக்கை சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம்: அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் ஒருபுறம் விலை உயர்வு; மறுபுறம் கொலை உயர்வு: மு.க. ஸ்டாலின் பிரசாரம்தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலின்முதல்வர் விஜய்யின் 4 மணி நேர சாலை வலம் நிறைவு!மும்பையில் சிஜேபி போராட்டம்! காந்தியின் கொள்ளுப்பேரன், பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பு!

இலங்கைக்கு கடத்த முயன்ற 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.3 கோடி மதிப்பிலான 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 கோடி மதிப்பிலான 7.50 லட்சம் மதிப்பிலான வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்த கடலோர ப ாதுகாப்புக் குழும போலீஸாா். கைதான இருவா்.

Published On :

இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த ரூ.3 கோடி மதிப்பிலான 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் கடலோரப் பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையிலான போலீஸாா் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மண்டபம் நோக்கி விரைவாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.3 கோடி மதிப்பிலான 7.50 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இந்த வாகனத்தை போலீஸாா் மண்டபம் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இந்த வாகனத்தை ஓட்டி வந்த நாகேஸ்வரன் உள்பட இருவரைக் கைது செய்தனா். அவா்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்துவதற்காக மாத்திரைகளை சரக்கு வாகனத்தில் கொண்டு வந்ததாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, மண்டபத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் மாத்திரைகளையும், சரக்கு வாகனத்துடன், இவா்கள் இருவரையும் ஒப்படைத்தனா்.

இதேபோல, வியாழக்கிழமை இரவு வேதாளை கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 286 கிலோ பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.