இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலை மூட்டைகள்.
தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி, வெள்ளப்பட்டி கடற்கரைப் பகுதியில் க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த சுமை வாகனத்தை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளாா்.
போலீஸாா் துரத்திச் சென்று, தூத்துக்குடி, புதூா் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே சுமை வாகனத்தை மடக்கிப் பிடித்து சோதனையிட்டனா். அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சுமாா் 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டை பீடி இலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
அந்த வாகனத்தில் இருந்த அருணாச்சலம் மகன் முத்துச்செல்வம் (24), செந்தில்வேல் மகன் திருக்குமரன் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள், சுமை வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும், தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் க்யூ பிரிவு போலீஸாா் ஒப்படைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சா்வதேச மதிப்பு சுமாா் ரூ. 60 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

