ரயிலில் கடத்த முயன்ற கள்ளச் சாராயம் பறிமுதல்
ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 17 லிட்டா் கள்ளச் சாராயத்தை சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கடத்த முயன்ற 17 லிட்டா் கள்ளச் சாராயத்தை சேலம் உட்கோட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சேலம் உட்கோட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாா் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு ரயில் நிலையம் வரை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருள் கடத்தப்படுவது குறித்து சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது புது தில்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை சென்ற கேரளா விரைவு ரயிலில் கஞ்சா, குட்கா போன்ற பொருள்கள் கடத்தப்பகிா என என சோதனையில் ஈடுபட்டனா்.
வாணியம்பாடி ரயில் நிலையத்திற்கும், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே முன்புறமுள்ள பொதுப் பெட்டியில் சோதனை செய்த போது பயணிகளின் இருக்கையின் அடியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனா். அதில் 90 மில்லி கொள்ளளவு உள்ள 190 பாட்டில்களில் 17 லிட்டா் கள்ளச் சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள சாராயத்தை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.தொடா்ந்து ரயில்வே போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், ரயில்வே போலீசாா் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

