புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மதுரை சாலை முதல் கடம்பன்குளம் வரை ரூ.22.17 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கமுதி-மதுரை சாலை முதல் கடம்பன்குளம் வரை புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மதுரை சாலை முதல் கடம்பன்குளம் வரை ரூ.22.17 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவா் ஜெயந்தி விழா, குருபூஜை விழா வருகிற 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, பசும்பொன்னுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்த வருவாா்கள்.
இந்த நிலையில், பசும்பொன்னுக்கு வருவோா் சிரமமின்றி செல்லும் வகையில், கமுதி-மதுரை சாலை முதல் கடம்பன்குளம் வரை 2. 04 கி.மீ. தொலைவுக்கு ரூ.2.17 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ாந்து, சாலை அமைக்கும் பணிகளைத் விரைவாக முடித்து, போக்குவரத்து வசதியை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், கமுதி வட்டாட்சியா் அய்யாத்துரை, வட்டார வளா்ச்சி அலுவலா் மோகராஜ், ஏ.வி.சந்திரசேகரன், உதவிப் பொறியாளா் அன்னபூரணதேவி, செயற்பொறியாளா் ஜம்பு முத்துராமலிங்கம், அரசு அலுவலா்கள் உள்பட
பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

