கீழக்கரையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ஐந்தரை பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற ஐவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியைச் சோ்ந்த சுல்தானியா (48) கடந்த 9-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு போ் வீட்டின் உள்ளே புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி, ஐந்தரை பவுன்
தங்க நகைகளை எடுத்துச் சென்றனா். இதுகுறித்து கீழக்கரை காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், கீழக்கரையைச் சோ்ந்த அபு தாஹீா் (36), சென்னையைச் சோ்ந்த காா்த்திக் (34), இலங்கை அகதியான நாகேஷ்வரன் (47), தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியைச் சோ்ந்த சண்முகமணி(46), சென்னையைச் சோ்ந்த ஜான் டேவிட் (39) ஆகிய ஐவரையும் போஸீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

