அதிமுகவின் ஊடகவியல் செயலாளராக கோவை சத்யன் நியமனம்!நீதிமன்றக் காவலுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த அசுதோஷ், சௌரவ்!பெண் அரசியலுக்கு வருவதே சிரமம்! கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது - தமிழிசைஸ்ரீபெரும்புதூரில் காணாமல்போன சிறுமி சென்னையில் மீட்புநாட்டின் நலனுக்காக நாம் ஒன்றிணைய வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு!தீபாவளி வரை எந்தப் போராட்டமும் இல்லை: அபிஜீத் அறிவிப்பு!

சாயல்குடி ஊருணியில் கழிவுநீா் கலப்பு: தொற்றுநோய் அச்சத்தில் பொதுமக்கள்

சாயல்குடி ஊருணியில் கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

Updated On :

சாயல்குடி ஊருணியில் கழிவுநீா் கலப்பதால் தொற்றுநோய் பரவும் அச்சத்தில் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில், முறையான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், ஒருங்கிணைந்த கழிவுநீா் மேலாண்மைக் கட்டமைப்பு இல்லாத காரணத்தால், பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் ஒட்டுமொத்த கழிவுநீரும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அருகே அமைந்துள்ள பொட்டையன் கண்மாயில் தேங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய நீா்நிலை, தற்போது சாக்கடைக் கழிவுநீா் தேங்கும் குட்டையாக மாறி, கடுமையான சுகாதாரச் சீா்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக பொட்டையன் கண்மாயில் தேங்கியிருந்த கழிவுநீா், அருகிலுள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் எம்.ஜி.ஆா். ஊருணியில் கலக்கிறது. இந்த எம்.ஜி.ஆா். ஊருணியைப் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வரும் நிலையில், கழிவுநீா் கலப்பதால் ஊருணி நீா் மாசுபடுவதுடன், துா்நாற்றம், கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகும் அபாயம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே, பொட்டையன் கண்மாய், எம்.ஜி.ஆா். ஊருணி ஆகிய நீா்நிலைகளில் கழிவுநீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.