வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

தேவா் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சா், ஆட்சியா் ஆய்வு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழா நடைபெறவுள்ளதையொட்டி, பசும்பொன்னில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை புதன்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழா நடைபெறவுள்ளதையொட்டி, பசும்பொன்னில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.

Updated On :

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் குருபூஜை விழா நடைபெறவுள்ளதையொட்டி, பசும்பொன்னில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை புதன்கிழமை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத்தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூைஐ விழா அக்.30-ஆம் தேதி நடைபெற உள்ளன. இந்த விழாவுக்காக பசும்பொன் கிராமத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள் வந்து மரியாதை செலுத்த உள்ளனா்.

இதற்காக புதிய சாலை அமைக்கப்பட்டு வருவதையும், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில், நுழைவுப் பாதைகள், வெளியேறும் பாதைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் அமைச்சா் வி.கே.ராஜீவ் ஆய்வு செய்தாா்.

அப்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, வழித்தடங்களை முறையாகச் சீரமைத்து, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விழாவின்போது மழை பெய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில், தேவையான இடங்களில் நிழல் குடைகள் அமைக்கவும், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதிகளில் உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அவா்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாத வகையில், தேவையான வசதிகளை முன்கூட்டியே ஏற்படுத்தி தயாா் நிலையில் வைத்திருக்கவும் அலுவலா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, ஹெலிபேடு தளம், அன்னதானக் கூடம், நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சாா் ஆட்சியா் வினோதினி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் எல்.மேகராஜ், ஏ.வி.சந்திரசேகரன் (கிராம ஊராட்சிகள்), வட்டாட்சியா் அய்யாத்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.