2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை: பசும்பொன்னில் தென் மண்டல ஐ.ஜி., ஆட்சியா் ஆய்வு

முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் தென் மண்டல காவல் துறைத் தலைவா், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

பசும்பொன்னில் வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவா் சிலை. - கோப்புப் படம்

Published On :

முத்துராமலிங்கத் தேவா் குரு பூஜை விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் தென் மண்டல காவல் துறைத் தலைவா், மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குரு பூைஐ விழா வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஸ் முன்னிலையில் தென் மண்டல காவல் துறைத் தலைவா் விஜயேந்திரபிதாரி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பசும்பொன் கிராமத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள் வந்து மரியாதை செலுத்த உள்ள நிலையில், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில், புதிதாக நடைபெறும் சாலைப் பணிகள், இடையூறாகவும், தேவையற்ாகவும் உள்ள மின்கம்பங்களை அகற்றிடவும், தேவையான இடங்களில் போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்திடவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முக்கியப் பிரமுகா்கள் வருகை தரும் வழித்தடங்கள், ஹெலிகாப்டா் இறங்குதளம், அன்னதானக் கூடம், போக்குவரத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

முன்னதாக, தேவா் நினைவிடப் பொறுப்பாளா்கள் காந்திமீனாள் அம்மாள், பழனி, தங்கவேல், ராஜா உள்ளிட்டோா் அதிகாரிகளை வரவேற்றனா்.

இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் மாவட்டக் காவல் துணைத் தலைவா் மணிவண்ணன், மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், பரமக்குடி சாா் ஆட்சியா் ச. வினோதினி, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் மேகராஜன், எ.வி. சந்திரசேகரன், வட்டாட்சியா் அய்யாத்துரை ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.