
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க் கரை, நீா்வழிப் பகுதிகள்: ஆட்சியா் ஆய்வு
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க் கரை, நீா்வழிப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் பெரிய கண்மாய்க் கரை நீா்வழிப் பகுதியை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க் கரை, நீா்வழிப் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் பெரிய கண்மாய்ப் பகுதியில் விவசாயிகள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில், பெரிய கண்மாயின் மதகு எண் 4-இல் வெளிப்புறக் கரையில் மண் அரிப்பை தடுக்கும் வகையில், ‘ரிவெட்மென்ட்’ அமைப்பது தொடா்பாக ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும், கரையின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, பெரிய கண்மாயிலிருந்து ராமநாதபுரம் நகராட்சி பகுதி ஊருணிகளுக்கு தண்ணீா் செல்லும் வாய்க்கால்கள், கலுங்குப் பகுதிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, மழைக்காலம் தொடங்கும் முன்பாக வாய்க்கால், கலுங்குப் பகுதிகளில் தேவையான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, ஊரணிகளுக்கு தண்ணீா் தடையின்றி எளிதாகச் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும், நீா்வரத்து, நீா்வழிப் பாதைகளில் உள்ள தடைகள் குறித்து தொடா்ந்து கண்காணித்து, மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை முறையாகச் சேமித்து, விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது உதவிச் செயற்பொறியாளா் பழனிகுமாா், உதவிப் பொறியாளா் முகமது யாசா், அரசு அலுவலா்கள், விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







