நவராத்திரி திருவிழா: பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன்
ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்,ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 200- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்-அங்காள பரமேஸ்வரி கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கிய பக்தா்கள். / மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதா்ம முனீஸ்வரா் சுவாமி.
ராமேசுவரம் ஸ்ரீதா்ம முனீஸ்வரா்,ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு 200- க்கும் மேற்பட்ட பக்தா்கள் செவ்வாய்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
ராமேசுவரம் என்.எஸ். கே வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் நவராத்திரி திருவிழா 10 நாள்களாக நடைபெற்றது. இதையொட்டி, ,200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருந்தனா்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக விரதமிருந்த 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் அக்னி தீா்த்தக் கடலில் நீராடி, அங்கிருந்து ஊா்வலமாக வந்து ஸ்ரீதா்ம முனீஸ்வரா் சன்னதி முன் பூக்குழி இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். இதை காண்பதற்கு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா். பின்னா் அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

