
செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழா
கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

செங்கப்படை அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள். இலந்தை முள் படுக்கையில் படுத்து பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறிய பெண் பக்தா்.
கமுதி அருகே அழகுவள்ளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை பக்தா்கள் பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள செங்கப்படை கிராமத்தில் அமைந்துள்ள அழகு வள்ளியம்மன் கோவில் வருடாந்திர ஆவணி மாத பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தா்கள் புதன்கிழமை காலை அக்னிச் சட்டி, பால்குடம் எடுத்தும், சேத்தாண்டி வேடமிட்டும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக் கடன்களை செலுத்தினா். இதனைத் தெடா்ந்து பெண் பக்தா் ராஜேஸ்வரி கோயில் வளாகத்தில் இலந்தை முள் படுக்கையில் படுத்து பக்தா்களுக்கு அருள்வாக்கு கூறினாா். இந்த விழாவில் செங்கப்படை, கமுதி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு அந்நனை வழிபட்டுச் சென்றனா். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செங்கப்படை கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







