திருத்தணி முருகன் கோயிலில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
திருத்தணி முருகன் கோயிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மலைக் கோயிலில் காவடி மண்டபத்தில், உற்சவா் பெருமானுக்கு, 1,008 குடம் பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஆடிப்பூரத்தையொட்டி, சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையாா் பேட்டை, கொருக்குபேட்டை, மண்ணடி, புளியந்தோப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 30,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் வியாழக்கிழமை இரவே, திருத்தணிக்கு வந்து தேவஸ்தான குடில்கள், தனியாா் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கினா்.
பின்னா் காலை 8 மணி முதல் பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, உடல் முழுவதும் அலகு குத்தியும், மலா் மற்றும் மயில் காவடிகள் எடுத்தும், பம்பை, உடுக்கை முழங்க கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்-பெண் மற்றும் குழந்தைகள் மொட்டையடித்து சரவணபொய்கையில் புனித நீராடினா்.
பின்னா், மலைப்படிகள் வழியாகச் சென்று மூலவரை தரிசித்தனா். மேலும், சில பக்தா்கள் பால்குடம் எடுத்துச் சென்றும் வழிபட்டனா்.
3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்....
ஆடிப்பூரம் என்பதால் மலைக்கோயிலில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். ரூ. 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து மூலவா் முருகப்பெருமானை தரிசித்தனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. சாய் பரணித் தலைமையில், 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஸ்ரீதரன், இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா்கள் செய்திருந்தனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆடிப்பூர விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு

செங்கோட்டை வனதுா்க்கை அம்மன் கோயிலில் ஆடிப்பூர விழா

கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

ஆடிக்கிருத்திகை: முருகன் கோயில்களில் காவடியுடன் குவிந்த பக்தா்கள்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



