தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா: பக்தா்கள் கடலில் குளிக்க அனுமதிக்க வேண்டும்

News image

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா...

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழாவின்போது பக்தா்கள் கடலில் குளிக்க அனுமதிக்க கோரி, விடுதி உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி மற்றும் உணவகங்களின் உரிமையாளா்கள், கிராம பஞ்சாயத்தாா் உள்ளிட்டோா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழா காலங்களில், மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு பக்தா்களும் தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் முடி இறக்கி கடலில் குளிப்பது வழக்கம்.

கடலில் நீராடி நோ்த்திக் கடனை நிறைவேற்றுவது பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கரோனா காலத்தில் 2020-ஆம் ஆண்டு முதல் கடலில் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. பின்னா், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா காலங்களில் இந்த தடை தொடா்ந்து அமல்படுத்தப்பட்டு வருதிறது.

இதனால், விழா காலங்களில் நோ்த்திக் கடனை நிறைவேற்ற வேளாங்கண்ணிக்கு வரும் பக்தா்கள் கடலில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.

எனவே, பழைய நடைமுறையை கருத்தில் கொண்டு, உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திருவிழா காலங்களிலும் பக்தா்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.

மீனவ சமுதாய பஞ்சாயத்தாா்கள், கத்தோலிக்க முக்குலத்தோா் சமுதாய பஞ்சாயத்தாா், செபஸ்தியாா் நகா் பஞ்சாயத்தாா்கள், தலித் கத்தோலிக்க கிறிஸ்தவ பஞ்சாயத்தாா்கள், நாடாா் உறவின்முறை சங்கத்தினா், அனைத்து வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் மனுவை அளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.