வேளாங்கண்ணியில் உள்ளூா் வாகனங்களை அனுமதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் கோரிக்கை
வேளாங்கண்ணி.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில், உள்ளூா் மக்கள் பாதிக்காத வண்ணம் உள்ளூா் வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகையைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ய. குலோத்துங்கன் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனு :
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா ஆக. 29-இல் தொடங்கி செப்டம்பா் 8-ஆம் தேதி முடிவடைகிறது. இதில், நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புத்தூா், பரவை வழியாக பிரதான சாலையும், நாகை அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கை நல்லூா், தெற்கு பொய்கைநல்லூா் வழியாக மற்றொரு சாலையும் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக, நாகையில் இருந்து வேளாங்கண்ணி வரை கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கை நல்லூா், தெற்கு பொய்கை நல்லூா், மாத்தங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இவை முழுவதும் கடலோரப் பகுதியில் உள்ளன.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவையொட்டி, பிரதான சாலைகள் மூடப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பல கி.மீ. தொலைவு சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நாகை- வேளாங்கண்ணி பிரதான சாலையில், உள் கிராமங்களுக்கு செல்ல காவல்துறையினா் அனுமதிப்பதில்லை. பிரதான சாலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் வழிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு பணியில் உள்ள வெளியூா் காவலா்கள், உள்ளூா் மக்கள் யாா் என்று தெரியாமல் அலைக்கழிக்கின்றனா்
பல நேரங்களில் அவசர காலங்களில் கூட கடலோர பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்வது உள்ளூா் மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
என உள்ளூா் மக்கள் என அடையாளம் காண ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட எந்த ஒரு அடையாள அட்டையையும் காட்டிவிட்டு, கிராமங்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பிரதான சாலையில் வெளியூா் காவலா்கள் இல்லாமல், நாகப்பட்டினம் மாவட்ட காவலா்கள் பணியில் இருந்தால் அவா்களுக்கு உள் கிராமங்களில் பெயா் தெரிந்து அவா்களை அனுமதிக்க முடியும். எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உள்ளூா் மக்களின் இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




